நூலிழையில் தேசிய விருதை நழுவ விட்ட தமிழ் முன்னணி நடிகர்கள்.! அட லிஸ்டில் தல அஜித்தும் இருக்கிறாரே

actor
actor

எப்படி ஒரு நடிகருக்கு கிடைக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய விருதான ஆஸ்கர் விருது இருக்கோ அதேபோல இந்திய சினிமாவில்  ஒரு நடிகருக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய விருதாக இருக்கிறது  தேசிய விருது.

ஏகப்பட்ட தமிழ் நடிகர்கள் அவர்களுடைய நடிப்பிற்காக இந்த விருதை வாங்கி இருக்கிறார்கள் இன்னும் சில பேர் ரொம்ப சூப்பரான பார்ப்பாமேன்ஸ் காட்டி இருப்பாங்க சில காரணங்களால் அவருக்கு அந்த விருது கிடைக்காமல் போயிருக்கும். அப்படிப்பட்ட நடிகர்கள் யார் என்றும் அந்த திரைப்படங்கள் என்னவென்றும் நாம் தற்போது பார்க்க இருக்கிறோம்.

இந்த வரிசையில் முதலில் பார்க்க இருப்பது நடிகர் சூர்யா அவர்கள் 2008ல் வெளியான வாரணம் ஆயிரம் சூர்யா அவர்களின் வாழ்க்கையில் பெஸ்டான திரைப்படம் என்று சொல்லலாம். அந்த வருடத்திற்கான சிறந்த படம் என்ற வரிசையில் வாரணம் ஆயிரம் படுத்திருக்க நேஷனல் அவார்டு கிடைத்திருந்தது இந்தப் படத்தில் மூன்று வேடத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் சூர்யா அவர்கள் நடித்திருக்க மாட்டார் வாழ்தே இருப்பார். அதாவதுகாதலியை பிரிந்த ஏக்கம், தந்தையை பிரிந்த சோகம் என்று அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார் நடிகர் சூர்யா. நேஷனல் அவார்டு கிடைக்கலையே தவிர அந்த வருடத்திற்கான பிலிம்பேர் அவார்ட் அவருக்கு கிடைத்துள்ளது.

surya
surya

இந்த வரிசையில் அடுத்ததாக பார்க்கப்போவது தல அஜித் குமார் இவர் வந்து 2006 இல் வெளியான கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த வரலாறு மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்கள் இந்த கேரக்டரில் நடிகை கண்டிப்பாக இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க தயங்கி இருப்பாங்க அந்த படத்தில் ரொம்ப தைரியமா நம்ம தல அஜித்குமார் நடித்து இருப்பார். இது வயதான நடக்க முடியாத அப்பா, மகன், பரதநாட்டிய கலைஞன், வில்லன், என ஏகப்பட்ட இந்த புகைப்படம்கேரக்டரில் ஒரே படத்தில் ரொம்ப அழகாகவே நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு இவருக்கு கண்டிப்பா நேஷனல் அவார்டு கிடைக்கணும், ஆனால் ஒரு சில காரணங்களால் அவருக்கு கிடைக்கவில்லை.

ajith
ajith

வரிசையில் அடுத்ததாக பார்க்க இருப்பது சியான் விக்ரம் அவர்கள் இவர் மேக்கப் போட்டு நடிக்கிறதை விட மேக்கப் இல்லாமல் ஒரு படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 2010ல் வெளியான ராவணன் இந்த படம் பாக்ஸோஃபீஸ்சில் வேண்டுமென்றால் ஏமார்ந்து இருக்கலாம் ஆனால் தன்னுடைய நடிப்பின் மூலமாக  என்னைக்குமே விக்ரம் அவர்கள் ஏமாத்தறது இல்லை. இந்தப் படத்தில் பார்த்து எனக்கு விக்ரம் அவர்கள் அந்த கதாபாத்திரமாகவே நடித்திருப்பார்.

vikram
vikram

இந்த வரிசையில் அடுத்ததாக பார்க்க இருப்பது நடிகர் குரு சோமசுந்தரம் இவர் வந்து பாத்தீங்கன்னா 2016 இல் வெளியான ஜோக்கர் தமிழ் சினிமா ரொம்ப காலமாக மறந்திருந்த ஒரு வார்த்தைக்கு இந்தப் படம் மூலமா அர்த்தம் தேடிக் கொடுத்தார் அது தான் எதார்த்தமான நடிப்பு. இந்தப் படத்தில் மன்னர் மன்னன் என்ற கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்திருப்பார் இவரைத் தாண்டி இந்த கதாபாத்திரத்திற்கு வேற ஒரு நடிகர் இந்த அளவிற்கு தத்ரூபமாக உயிர் கொடுத்திருக்க முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விதான் . ஜோக்கர் படுத்திருக்கு அந்த வருடத்திற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. ஆனால் குரு சோமசுந்தரம் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை என்று நிறைய பேர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.

இந்த வரிசையில் அடுத்ததாக பார்க்க இருப்பது நடிகர் எம் எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நடிகர்கள் என்ற ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக இவருடைய பெயரும் இடம் பிடித்திருக்கும் குறிப்பா 8 தோட்டாக்கள் என்ற படத்தில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதா நாம் யாரும் மறந்திருக்க முடியாது அந்த அளவிற்கு ஒரு அழுத்தம் மற்றும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் எம் எஸ் பாஸ்கர். குறிப்பா  சொல்ல வேண்டும் என்றால் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி அந்த ரெஸ்டாரன்டில் பேசுற அந்த ஒரு சீன்  போதுங்க 100 தேசிய விருதுகளை அவர் கையில் கொடுக்கலாம்.

இந்த வரிசையில் கடைசியாக பார்க்க இருப்பது நடிகர் பசுபதி அவர்கள் தமிழ் சினிமாவில் சரியாக பயன்படுத்தப்படாத  மிகச்சிறந்த ஒரு நடிகர் என்று இவரைச் சொல்லலாம் 2006 இல் வெளியான வெயில் இந்த படத்தில் பாசத்திற்காக தவிக்கிற ஒரு அண்ணனா, மகனா, நடிப்பில் சதமடித்து இருப்பார் பசுபதி அவர்கள். தமிழ் சினிமாவோட மறக்க முடியாத கதாபாத்திரத்தில் முருகேசன் கதாபாத்திரமும் ஒன்று. குறிப்பாக அவருடைய அப்பா கிட்ட இவர் அழுதுகிட்டே பேசுற ஒரு காட்சி  இன்னும் பாக்குற பலபேர் கண்கல குளமாக்கும்.