சினிமாவில் நடித்து வரும் நடிகர்கள் பெரும்பாலும் நடிகர் தொழிலை மட்டும் நம்பாமல் வேறு சில பிஸ்னஸ்களிலும் தலைகாட்டி வருகிறார்கள். ஏனென்றால் அவர்கள் நடித்து வரும் படம் ஒரு சில ஹிட் ஆகும் ஒரு சில படங்கள் பிளாப் ஆகும் அதன் மூலம் அவர்களது மார்க்கெட் எப்பொழுது வேண்டுமானாலும் சரியும். இதனால் பல பிசினஸ்களையும் நடத்தி அதன் மூலமும் காசு பார்த்து வருகின்றனர். அப்படி நடிப்பு மட்டுமல்லாமல் ஹோட்டல் நடத்தியும் சிலர் நல்ல காசு பார்த்து வருகின்றனர். அந்த நடிகர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.
சூரி : சினிமாவில் காமெடி நடிகராக பிரபலம் அடைந்து தற்போது ஹீரோவாகவும் படங்களில் நடித்து வரும் சூரி அவரது சொந்த ஊரான மதுரையில் இரண்டு ஹோட்டல்கள் நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் டி நகரில் அம்மன் ஹோட்டல் என்ற பெயரிலும் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இதன் மூலமும் நல்ல காசு பார்த்து வருகிறார்.
கருணாஸ் : நடிகர் கருணாஸ் ஒரு கட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தார். தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் சாலிகிராமத்தில் கருணாஸ் நான் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஜீவா : முன்னாடி தயாரிப்பாளரின் மகனாக சினிமாவில் என்ட்ரி கொடுத்து அவருக்கென நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டு சிறப்பான படங்களில் நடித்து ஓடியவர் ஜீவா. இவருக்கு தற்போது தமிழ் சினிமா அதிக வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்றாலும் அவரை நாடிவரும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஜீவா டி நகரில் ஒன் எம் பி என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் ஒன்றை நடத்தி வருகிறார் .
ஆர்யா : நடிகர் ஆர்யா சினிமாவில் டாப் நடிகர்களுக்கு நிகராக இடம் பிடிக்க வேண்டும் என தொடர்ந்து படங்களில் நடித்து தான் வருகிறார். ஆனால் அவரது படங்கள் பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அவர் அண்ணா நகரில் sea shell என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
ஆர்கே சுரேஷ் : சினிமாவில் நடிகர். தயாரிப்பாளர். அரசியல் என அனைத்திலும் ஈடுபட்டு ஓடிக்கொண்டிருக்கும் இவர் சென்னை கேகே நகரில் வாங்க சாப்பிடலாம் என்ற ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார்.இதனால் நாலா பக்கமும் காசு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.