2023ல் ரசிகர்களை உலுக்கிய 5 மரணச் செய்தி.. மாரிமுத்துவுக்கு முன்பே இத்தனை பேரா..

Actors passed away in 2023
Actors passed away in 2023

Actors passed away in 2023: பிறப்பு என்றால் இறப்பு என்பது அனைவர் வாழ்க்கையிலும் சரிசமம் தான். அது நல்லவர் கெட்டவர் என்று பார்த்தெல்லாம் வருவது இல்லை அப்படி கலைஞர்கள் பல கோடி சொத்து சேர்த்து வைத்தாலும் இறப்பு என்பது வந்தே தீரும். அந்த வகையில் அவர்கள் மறைந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நினைவாக இருந்து வருகிறார்கள். அப்படி தற்பொழுது 2023ஆம் ஆண்டு திடீரென்று இறந்து ரசிகர்களை சோகமடைய வைத்த ஐந்து இறப்புகள் குறித்து பார்க்கலாம்.

மாரிமுத்து: இயக்குனராகவும் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தாலும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியலில் ‘எமம் ஏய்’ என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். செப்டம்பர் மாதம் டப்பிங் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது மாரடைப்பால் காலமானார்.

25 வயது இளம் பையன் போல் அதிரடியாக உடல் எடையை குறைத்த அஜித்.! இதுதான் விடா முயற்சி கெட்டப்பா ..

மயில்சாமி: காமெடியனாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த மயில்சாமி தனக்கு இல்லை என்றாலும் ஏராளமான ஏழை மக்களுக்கு உதவி செய்திருந்தார். ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையுடைய மயில்சாமி கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார்.

மனோபாலா: இயக்குனர், தயாரிப்பாளர், குணசேத்திர நடிகர் பன்முகத் திறமைகளை கொண்ட மனோபாலா ஒல்லியாக இருப்பதனால் காமெடியின் மூலம் பரிச்சயமானார். பிறகு ஹெச் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை படத்தினை தயாரித்தார். இவருக்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை மேற்கொண்டு இருந்த நிலையில் கடந்த மே 3ஆம் தேதி காலமானார்.

ஷாலினி பேச்சை கேட்ட அஜித்..! பைக்கை தொடாததற்கு காரணம் இதுதானா.?

விஜய் ஆண்டனி மகள் மீரா: விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தனது 16 வயதில் தற்கொலை செய்து கொண்டார் இது திரை பிரபலங்களை மீளா சோகத்தில் ஆழ்த்தியது. பள்ளி படித்துக் கொண்டிருந்த மீரா மன உளைச்சல் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பங்காரு அடிகள்: ஆதிபராசக்தி தொண்டு நிறுவனத்தின் மூலம் தொண்டுகள் மேற்கொண்டு வந்த பங்காரு அடிகள் வயது முதிர்ச்சி காரணமாக அக்டோபரில் காலமானார். இவருக்கு மத்திய அரசு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.