மகேஷ் பாபுக்கு வில்லனாக நடிக்க களம் இறங்கும் தமிழ் நடிகர்.? யார் அந்த நடிகர் தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.

mahesh-babu
mahesh-babu

தெலுங்கு சினிமாவில் பல முன்னணி ஜாம்பவான்கள் இருக்கின்றனர்  அவர்களது இடத்தை பிடிக்க தற்பொழுது ஓடிக் கொண்டே இருப்பவர் டாப் நடிகர் மகேஷ் பாபு.

அதற்கு ஏற்றார் போல இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வசூல் வேட்டை நடத்துவதோடு விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெருகின்றன மேலும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுக்கும் நடிகர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

மகேஷ் பாபு சென்டிமென்ட் காட்சிகளை விட ஸ்டண்ட் காட்சிகளில் அசாதாரணமாக நடிப்பது அவருக்கு கைவந்த கலை அதுவும் தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் கவர்ச்சி மற்றும் ஆக்ஷன் ப்ளாக் காட்சிகளை தான் பெரிதும் பார்ப்பார்கள் அதை சரியாக புரிந்து கொண்ட மகேஷ்பாபு ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடல் எடுப்பதால்  இவருக்கென  ஒரு ரசிகர் கூட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

மகேஷ்பாபு தற்பொழுது பரசுராம் இயக்கத்தில்  உருவாக உள்ள sarkaru vaari paata என்ற ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் இந்த திரைப்படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக தென்னிந்திய சினிமாவில் சிறப்பாக வளரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க உள்ளார். ஏற்கனவே விஷாலுடன் இரும்புத்திரை படத்தில் மிரட்டினார். அதே போல  அர்ஜுன் இந்த திரைப்படத்திலும் மிரட்ட ரெடியாக உள்ளார்.

இந்த படத்தில் மகேஷ் பாபுவும் ஆக்சன் கிங் அர்ஜுன் மோதும் காட்சிகள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் அந்த அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.