தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவருக்கு தற்போது கூட பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ரசிகர்கள் #GetWellsoonSURIYAanna என்ற டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்த நிலையில் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. அப்படியிருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது அதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதியுடன் நடமாடுகிறார்கள்.
ஆனால் இந்தக் கொரோனா பிரபலங்களை விட்டுவைக்கவில்லை நடிகர் சரத்குமார் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், ஐஸ்வர்யாராய், தமன்னா, ஜெனிலியா நிக்கி கல்ராணி, ராஜமௌலி பிரித்திவிராஜ், ராஜசேகர், ஜீவிதா என பலரும் பாதிக்கப்பட்ட நிலையில்.
தற்போது சூர்யாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது சென்னையில் வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சூர்யா தன்னுடைய அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம் அச்சத்துடன் முடங்கி விட முடியாது அந்நேரம் பாதுகாப்பும் கவனமும் அவசியம் அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும் நன்றிகளும் என தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் பலரும் #GetWellSoonSURIYAanna என்ற டேக்கை கிரியேட் செய்து ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
சூர்யாவின் குழந்தைகள் மும்பையில் ஜோதிகா வீட்டில் இருந்தார்கள் அவர்களைப் பார்ப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு மும்பை சென்றார் சூர்யா அதன் பிறகுதான் சூர்யா அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது பின்பு பரிசோதனையில் சூர்யாவிற்கு கோரண தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.
— Suriya Sivakumar (@Suriya_offl) February 7, 2021