சினிமாவும் ஒரு அரசியல்தான்.! திரையுலகில் இருந்து என்னை தூக்கி எறிந்து விட்டார்கள் பகீர் கிளப்பும் 80களின் நடிகர்.!

rajini-vijayakanth
rajini-vijayakanth

Tamil actor sudhakar : 1979ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சுதாகர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கிழக்கே போகும் ரயில், இந்த திரைப்படத்தின் மூலம் தான் நடிகர் சுதாகர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இவர் இதனைத் தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமா அரசியலால் தான் நான் ஒதுக்கப்பட்டதாக கூறி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார், நடிகர் சுதாகர் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் இனிக்கும் இளமை, மாந்தோப்புக்களியே, நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

நடிகர் சுதாகர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், அவர் பேட்டியில் கூறியதாவது தமிழில் சுமார் 48 திரைப்படங்கள் வரை நான் நடித்துள்ளேன் அதிலும் 35 திரைப்படத்திற்கு மேல் 100 நாட்களை கடந்து ஓடி உள்ளன, அதில் நானும் ராதிகாவும் கிட்டத்தட்ட 18 திரைப்படங்கள் ஒன்றாக நடித்துள்ளோம்.

இதில் பல திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளது ஆனால் ஒரு காலகட்டத்தில் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டேன் அதற்கு காரணம் எனக்கு எதிராக நடந்த சினிமா அரசியல்தான், என்னுடைய வளர்ச்சி சினிமாவில் பலருக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை அதனால் எனக்கு கிடைத்த வாய்ப்பு அனைத்தையும் அவர்கள் கெடுத்து விட்டார்கள்.

Comedian-Sudhakar-radhika
Comedian-Sudhakar-radhika

இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் சுதாகர் ஓபனாக பேசியுள்ளார், அதன்பிறகு சுதாகர் தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் வேறு வழியில்லாமல் சென்றார் காமெடி நடிகனாக தெலுங்கில் நடித்து வருகிறார்.

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுத்த சுதாகருக்கா இந்த நிலைமை என ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.