70-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்த பாண்டியனின் பரிதாபமான மரணம்.! எப்படி இறந்தார் தெரியுமா அதிர்ச்சி தகவல்

pandiyan

சினிமாவில் ஒருவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம், அதேபோல் ஒரு சிலருக்கு எந்த நேரத்தில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் கணிக்க முடியாது, அதுமட்டுமில்லாமல் சிலருக்கு எவ்வளவு நாள் சினிமா வாய்ப்பு தேடினாலும் கிடைக்காமலேயே இருக்கும்.

ஆனால்  ஒரு சிலருக்கோ அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்பதுபோல் உடனே கிடைத்து விடும், அப்படி மிகவும் ஈஸியாக சினிமா வாய்ப்பை பெற்றவர் நடிகர் பாண்டியன். இவர் 1983 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு வளையல் கடை போட்டு வைத்திருந்தார், அப்பொழுது பாரதிராஜாவின் கண்ணில் பட்டவர் தான் பாண்டியன். பாண்டியன் மண்வாசனை திரைப்படத்தை தொடர்ந்து ஆண்பாவம் குருசிசியன், புதுமைப்பெண், கிழக்குசீமையிலே என பல திரைப்படங்களில் நடித்தார்.

இப்படி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவரை அடுத்த ரஜினி என அழைத்தார்கள், குரு சிஷ்யன் திரைப்படத்தில் ரஜினிக்கு தம்பியாகவும் நடித்தார். அரசியலில் முதலில் பலகாலமாக திமுகவில் தான் இருந்தார் ஆனால் இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் பின்பு தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அங்கு ஏற்பட்ட நட்பினால் பாண்டியனின் வாழ்க்கையே திசை மாறியது, பாண்டியன் ஒரு காலகட்டத்தில் குடிக்கு அடிமையானார், ஒவ்வொரு நாளும் குடிக்காமல் இருக்க முடியாத நிலையை அடைந்தார், 80 திரைப்படங்களில் நடித்த இருந்தும் ஒரு கால கட்டத்தில் சரியான கதையை தேர்வு செய்யாமல் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டார்.

பாண்டியன் அதிமுக அரசியலில் பல பிரச்சாரங்களை செய்தார், பின்பு ஒரு காலகட்டத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி குடிக்க கூட காசு இல்லாத அளவிற்கு சென்றார், அதனால் இவருக்கு மஞ்சள் காமாலை வந்தது பின்பு கல்லீரல் கெட்டு விட்டது என மதுரை தனியார் மருத்துவமனையில் 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

பாண்டியனின் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாழ வேண்டிய வயதில் மரணத்தைச் சந்தித்தார் பாண்டியன்.