இயக்குனர் அட்லீ தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோக்களை வைத்து சிறப்பான படங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பாலிவுட் பக்கம் திசை திரும்பி ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, சன்யா மல்கோத்ரா, யோகி பாபு மற்றும் பல பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விசாரணை அதிகாரியாக இந்த படத்தில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த படத்தின் மூலம் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாலிவுட் பக்கம் போய் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதுவும் ஷாருக்கானுடன் தனது முதல் படத்தில் நடிப்பதால் செம சந்தோஷத்தில் நயன்தாரா இருப்பதாக கூறப்படுகிறது.
ஜவான் திரை படத்தின் ஷூட்டிங் தற்போது பல்வேறு இடங்களில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் ஷாருக்கான் தயாரிக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் ஒருசில கதைகளுக்காக சிறப்பான நடிகர்களை தற்போதும் தேர்வு செய்து வருகிறது.
படக்குழு அந்த வகையில் ராணா டகுபதி, தீபிகா படுகோன் இவர்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதியிடம் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் அதற்கு விஜயும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.