Vijay : தளபதி விஜய் தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாகவும் வசூல் சக்கரவர்த்தியாகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட இருக்கிறது படக்குழு.
லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், நிவின் பாலி ,பிரியா ஆனந்த், மனோபாலா, சாண்டி, மன்சூர் அலிகான், அர்ஜுன் தாஸ், மிஷ்கின், பகத் பாசில், கௌதம் வாசுதேவ் மேனன், கதிர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
வெங்கட் பிரபு திரைப்படத்தில் விஜய் இணையும் திரைப்படத்திற்கு விஜய்க்கு சம்பளமாக 175 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது ஆனால் விஜய் அரசியலில் விரைவில் நுழைய இருப்பதாகவும் அதனால் அரசியலில் நுழைந்த பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் எனவும் கூறி இருக்கிறார் அதனால் தான் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என ஒரு தரப்பு மக்கள் பேசுகிறார்கள்.
இந்த நிலையில் தளபதி விஜய் என்னதான் தற்பொழுது மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் சம்பளம் குறைவாக தான் சம்பளம் வாங்கியுள்ளார். தளபதி விஜய் ஒரு காலத்தில் வளரும் நடிகராக இருந்த பொழுது மற்ற நடிகர்களை விட குறைவான சம்பளத்தை தான் வாங்கி வந்துள்ளார்.
அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு விஜய் நடித்த வசந்த வாசல் என்ற திரைப்படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார் அந்தக் கட்டத்தில் ஹீரோவாக நடித்த விஜய்க்கு வெறும் இரண்டு லட்சம் தான் சம்பளம் ஆனால் வில்லனாக நடித்த மன்சூர் அலிகானுக்கு 4 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டது இந்த தகவலை சமீபத்தில் மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.