படிக்கும் வயதிலேயே மொத்தத்தையும் அனுபவித்த பிரபல நடிகர்கள்.! அதுவும் இந்த சின்ன வயசுலேயேவா.? ஷாக் ஆகும் ரசிகர்கள்

பொதுவாக சினிமாவில் உள்ள பிரபலங்கள் சீக்கிரமாகவே திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். அதிலும் குறிப்பாக நடிகைகள் திருமணமே செய்துகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் மார்க்கெட் வேல்யூ குறைந்துவிடும் என்றும் பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற காரணத்தினாலும் திருமணமே செய்து கொள்ளாமல் இன்று வரையும் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது 25 வயதிற்குள் எந்தெந்த பிரபல நடிகர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதையும் அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளார்கள் என்பதையும் தற்போது காண்போம்.

கமலஹாசன் – உலகநாயகன் கமலஹாசன் வாணி கணபதி என்பவரை 1938ஆம் ஆண்டில் தன்னுடைய 24 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்தும் செய்து கொண்டார்கள். அதன் பிறகு கமல் ஏகப்பட்ட திருமணம் செய்து கொண்டார்.இருந்தாலும் முதல் திருமணம் என்றால் வாணி கணபதி இவரை திருமணம் செய்து கொள்ளும் பொழுது கமல்ஹாசனுக்கு 24 வயது.

விஜய் – இளையதளபதி விஜய் 1999ஆம் ஆண்டில் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது இவருடைய வயது 25. தற்போது இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என்கின்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள்.

தனுஷ் – நடிகர் தனுஷ் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது தனுஷின் வயது 21. தற்போது இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

விக்ரம் பிரபு – நடிகர் விக்ரம் பிரபு 2007ஆம் ஆண்டில் லக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது இவரின் வயது 21. தற்போது இவருக்கு அழகான ஒரு ஆண் குழந்தை உள்ளார்.

பிரபுதேவா – நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவா 1995ஆம் ஆண்டில் பிரேம லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது பிரபுதேவாவின் வயது 22. தற்பொழுது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இவருடைய இளைய மகன் விஷால் கேன்சர் நோயால் இறந்துவிட்டார்.

சித்தார்த் – நடிகர் சித்தார்த் மேக்னா என்பவரை 2003ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது சித்தார்த்தின் வயது 24. அதன் பிறகு திருமணமாகி நான்கு வருடங்கள் கழித்து 2007ஆம் ஆண்டில் கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து செய்து கொண்டார்கள். இவருக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.

ஜீவா – நடிகர் ஜீவா சுப்ரியா என்பவரை 2007ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டால் திருமணத்தின்போது ஜீவாவின் வயது 23. தற்போது இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

விஜய் சேதுபதி – நடிகர் விஜய் சேதுபதி தனது காதலியான ஜெசியை 2003ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது விஜய் சேதுபதியின் வயது 25. தாற்பொழுது இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் – நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது சிவகார்த்திகேயனின் வயது 24 தற்போது இவருக்கு ஆராதனா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் – நடிகர் உதயநிதி ஸ்டாலின் கிருத்திகா என்பவரை 2002ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது உதயநிதி ஸ்டாலினின் வயது 25. தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஜித்தன் ரமேஷ் – நடிகர் ஜித்தன் ரமேஷ் ஷில்பா என்பவரை 2006ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது சித்தன் ரமேஷின் வயது 24. தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு பொண்ணும் உள்ளார்கள்.

சிபிராஜ் – நடிகர் சிபிராஜ் ரேவதி என்பவரை 2008ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது இவருடைய வயது 25. தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் – நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் சைந்தவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது ஜிவி பிரகாஷின் வயது 25. தற்போது தான் இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

விக்ராந்த் – நடிகர் விக்ராந்த் மாசா என்பவரை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது விக்ராந்தின் வயது 24. தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

சந்தானம் – காமெடி நடிகர் சந்தானம் 2004ஆம் ஆண்டில் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது சந்தானத்தின் வயது 24. தற்பொழுது ஒரு பையனும் மற்றும் இரண்டு பெண் குழந்தையும் உள்ளார்கள்.

Leave a Comment

Exit mobile version