சினிமா உலகில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து பின் சினிமாவில் இருந்து காணாமல் போய் விடுகின்றனர் அவர்களில் ஒருவரைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம் தமிழ்சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தாமிரபரணி இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் பானு.
முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தாலும் அதன்பின் தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நடிகை பானுவும் பெரிதளவு முயற்சி செய்தாரா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது ஆனால் தற்பொழுது இவர் திருமணம் செய்துகொண்டு மலையாள சினிமா பக்கத்தில் முக்தா ஜார்ஜ் என்ற பெயரில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
கல்யாணமானாலும் அழகு குறையாமல் செம சூப்பராக இருப்பதால் வாய்ப்புகள் மறுபக்கம் குவிந்த வண்ணமே இருக்கிறது. இவரைப்போலவே இவரது மகள் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் தற்போது நடிக்க தொடங்கியுள்ளார் இவர் நடிப்பில் வெளியான பத்தாம் வளைவு என்ற திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அசத்தி உள்ளது.
அதன் மூலம் முக்தா ஜார்ஜ் மகள் மக்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியுள்ளார். இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் இது போதாத குறைக்கு பானு என்கின்ற முக்தா ஜார்ஜ் சொந்தமாக ஒரு சலூன் கடையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை முக்தா ஜார்ஜ் மற்றும் அவரது மகள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பகிரப்பட்ட வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகில் அம்மாவையே தோற்கிறார்கள் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.