பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் விளையாடுவதற்காக தாமரைச்செல்வி வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

thamarai
thamarai

சமீபத்தில் ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி நிறைவுபெற்ற பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதலில் கமலஹாசன் கோலாகலமாக தொடங்கி வைத்திருந்தாலும் அவர் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து பைனல் நிகழ்ச்சி வரை சிம்பு சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சிலர்தான் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொண்டு விளையாடினர். ஆம் அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தாமரைச்செல்வி. இவர் மேடை நாடக கலைஞர் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் பலருக்கும் அறிமுகம் இல்லாதவர்.

இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் மக்கள் அனைவரிடமும் தாமரைச்செல்வி பிரபலமடைந்தார் அந்த அளவிற்கு தனது யுக்தியை  பயன்படுத்தி சிறப்பாக விளையாடி பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் நீண்டதூரம் பயணித்தார் இதைத்தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட்டிலும் கலந்துகொண்டார் இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் இறுதியில் பாலாஜி முருகதாஸ் மக்களிடையே அதிக வாக்குகளைப் பெற்று டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற்றார்.

அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நிரூப் நந்தகுமார் மற்றும் மூன்றாவது இடத்தை தாமரைச்செல்வி பிடித்திருந்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிந்த கையோடு தாமரைச்செல்வி முதலில் தனது மாமியாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியது.

இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டதற்கு தாமரைச்செல்வி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரைச்செல்விக்கு ஒரு வாரத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. தாமரைச்செல்வி பிக் பாஸ் வீட்டில் 70 நாட்கள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.