பார்ப்பவர்களை திகில் கிளப்பும் தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப் சீரியஸ் ட்ரெய்லர்.!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை தமன்னா. தொடர்ந்து ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முன்பெல்லாம் கமர்சியல் திரைப்படங்கள் நடித்து வந்த தமன்னா தற்பொழுது அவர்  நடிக்கும் கேரக்டருக்கும் முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் தேவி,பெட்டர்மாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் இவரின் கேரக்டருக்கு முக்கிய தரும் படமாக அமைந்தது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பாராட்டப்பட்டது. அந்த வகையில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது இவர் திரைப்படங்களில் இருந்து வெப் சீரியலில் நடித்து வருகிறார். அந்தவகையில் தமன்னா நடித்து வரும் இந்த வெப் சீரியலை இந்திரா சுப்பிரமணியம் இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து ஆனந்த விகடன் நிறுவனம் தயாரித்துள்ளது.

அந்தவகையில் இந்த வெப் சீரியல் நம்பர் ஒன் ஸ்டோரி பெயரில்  ட்ரைய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் ஆரம்பத்தில் பேனாவால் ஒரு நபரை மறைமுகமான கொலை நபர் ஒருவர் 47 முறை பேனாவால் குத்தி கொலை செய்துள்ளார்.

இவ்வாறு இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது இந்த வெப் சீரியல் மிகவும்  த்ரில்லிங்கானதாக இருக்கும் என்று வருகிறது. இந்நிலையில் நபர் ஸ்டோரீஸ் வெப் சீரியல் 20ஆம் தேதி ஹாட்ஸ்டார் வழியாக நேரடியாக வெளியாக உள்ளது.