நீ முதல்ல நிறுத்து அப்புறம் வந்து பேசு.. கரி பூசிய முகத்துடன் கருத்து சொன்ன தமன்னாவை விளாசிய ரசிகர்கள்..

tamannah

அமெரிக்காவில் சார்ஜ் பிளைட் மரணம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதற்காக ஹாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய அளவில் கேரளாவில் கர்ப்பமான யானை ஒன்றின் மரணம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, இதற்கும் அரசியல் கட்சியினர், தொழில் துறை பிரபலங்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது அதனால் இந்த இரண்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் உங்கள் மௌனம் உங்களைக் காப்பாற்றாது, மனிதனோ விலங்கோ ஒவ்வொரு உயிரும் முக்கியமில்லையா? எந்த ஒரு படைப்பையும் அழிப்பது இயற்கை விதிகளுக்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதர்களாக மாறி அன்பையும் பரிமாறி இறக்கத்தையும் வெளிப்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். என அந்த பதிவில் கூறியுள்ளார்.

மேலும்#backlivematter க்கு எதிராக பகிரப்பட்டு #alllivesmatter என்ற ஹேஸ்டேக் உடன் பயன்படுத்தியுளளார், இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலானது, இந்த தமன்னாவின் பதிவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தாலும் பலரும் அவரை மோசமாக விமர்சித்துள்ளார்கள்..

ரசிகர்கள் கூறியதாவது வெளிநாட்டில் வாழும் கறுப்பின மக்களுக்கு குரல் கொடுப்பது நல்ல விஷயம் தான் ஆனால் நீங்கள் உள் நாட்டில் இருக்கும் கருப்பு நிற மக்களின் பாதுகாப்பற்ற முறையில் உணரவைக்கும் வெள்ளை தோலை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிப்பது ஏன்.? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.