தன்னுடைய திருமணம் குறித்து வந்த வதந்திக்கு பதிலடி கொடுத்த தமன்னா.! அட இவர் இப்படி செய்வாருன்னு யாருமே எதிர்பார்கள?

tamanna
tamanna

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா இவர் தற்போது பிரபல தொழிலதிபரை திருமணம் செய்ய போவதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை தமன்னா கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிட்டதட்ட 17 ஆண்டுகளாக சினிமாவில் ஜொலித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் நடிகை தமன்னா பல திரைபடங்களில் நடித்து முன்னணி நடிகைக்கான அந்தஸ்தையும் பெற்றுகொண்டார்.

இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னா தற்போது பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொள்வதாக வந்த வதந்திக்கு பதில் அளித்த தமன்னா தற்போது என்னுடைய திருமணம் குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. நான் சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன இத்தனை வருடம் நான் சினிமாவில் நீடிப்பேன் என்று எனக்கே தெரியவில்லை ஆனால் சினிமாவில் எப்படியோ தாக்குப்பிடித்து விட்டேன்.

பொதுவாக பெண்களுக்கு திருமணம் வயது ஆகிவிட்டால் எல்லாரும் கேட்கும் ஒரே கேள்வி இதுதான். நான் இன்னும் திருமணத்தைப் பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என் திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் வரும் வதந்திகள் எல்லாமே பொய் தான் யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார் நடிகை தமன்னா.

அது மட்டுமல்லாமல் நான் திருமணம் செய்ய போவதாக முடிவை எடுத்தால் என்னுடைய திருமணம் குறித்து நானே சொல்கிறேன் என்று கூறியுள்ளார் ஆனால் தற்போது திருமணத்தைப் பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று நடிகை தமன்னா தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தமன்னா திருமணம் செய்யப் போகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.