வயது அதிகமாக அதிகமாக எண்ணங்களை மாற்றும் தமன்னா.? இப்ப அவருக்கு என்ன தோன்னுது தெரியுமா.?

tamanna
tamanna

தென்னிந்திய திரையுலகில் புதுமுக நடிகைகள் பலரும் வந்து பட வாய்ப்பை தட்டி தூக்கி சென்றனர் ஆனால் அவர்களெல்லாம் நிரந்தர இடத்தை பிடித்தார்கள் என்றால் அது கேள்விக்குறிதான் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் தான் நடிகை தமன்னா.

ஆள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சினிமாவை பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தால் ஆரம்பத்தில் வித்தியாசமான திரைப்படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தார் போக போக டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றியதால் ஒரு கட்டத்தில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்ட தொடங்கினார் அதன் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தையும் அதிகரித்துக் கொண்டார்.

தென்னிந்திய சினிமாவில் தற்போது அசைக்கமுடியாத நடிகையாக தமன்னா உருமாறி உள்ளதால் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு சும்மாவே கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார். சமூக வலைதள பக்கம் தொடங்கி தற்போது வெளியில் போகும்போது கூட குட்டையான உடைகளை அணிந்து வலம் வருவதால் ரசிகர்கள் தற்போது இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.

இப்படி இருந்தாலும் சமீப காலமாக இவருக்கு பெரிய அளவிலான படவாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருக்கின்றன. அவர்கள் கடைசியாக விஷாலுடன்  இணைந்து ஆக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் இந்த படம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை தராததால் தமிழ் பக்கம் தற்போது அவருக்கு இருக்கும் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியுள்ளது.

அந்தக் காரணத்தினால் தமன்னா தற்போது சரியாக சாப்பாட்டில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். மேலும் மன அழுத்தத்தில் இருப்பது போல தெரிகிறது என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே ஒப்புக் கொண்டு உள்ளார் அதாவது தற்பொழுது நான் மன அழுத்தத்தில் தான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் வயது அதிகமாக அதிகமாக வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு தோன்றி உள்ளதாம். அப்படிப் பார்த்தால் தமன்னா இனி பெருமளவு சினிமாவில் நடிக்கிறாரோ இல்லையோ இன்னும் 2 வருடத்தில் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.