தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா இவர் இந்தி சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வழிகாட்டியுள்ளார் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், தனுஷ் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் இதன் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார்.
மேலும் நமது நடிகை இவ்வாறு உலக அளவில் பிரபலம் ஆவதற்கு அவர் நடித்த பாகுபலி திரைப்படம் முக்கிய பங்கு வகிக்கிறது ஏனெனில் நடிகை தமன்னா இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அவருடைய கேரியரே மாறியது மட்டுமில்லாமல் அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.
அந்த வகையில் சமீபத்தில் நமது நடிகை அமேசான் தளத்தில் இவருடைய நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி என்ற வெப் தொடரானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது இவ்வாறு பிரபலமான நமது நடிகை கிளாமரிலும் சரி கமர்சியலிலும் சரி இவரை மிஞ்ச ஆளே கிடையாது
அந்தவகையில் தாவணி பாவாடை அணிந்து நடித்தது மட்டுமில்லாமல் புடவை சுடிதார் தற்போது மாடர்ன் உடையில் கூட ரசிகர்களின் மனதை மயக்கி வருகிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் நிகழ்ச்சி அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.
சமீபத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களாக தேடி தேடி நடித்து வந்தாலும் இவருக்கு சொல்லும்படி பட வாய்ப்புகள் வந்தபடி கிடையாது அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களை கவரும் வகையில் இணையத்தில் புகைப் படம் வெளியிட ஆரம்பித்துவிட்டார்.