அஜித், விஜய் பற்றி தனக்கு தெரிந்ததை ஓபன்னாக சொன்ன தமன்னா.! காட்டு தீயாய் செய்தி.

தென்னிந்திய திரையுலகில் பல்வேறுவிதமான டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி ஜோடி போட்டு நடித்தவர் தமன்னா. தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இவர் தனது சிறப்பான பயணத்தை மேற்கொண்டாலும் அவருக்கு பேரும் புகழும் பெற்று தந்தது என்னமோ தமிழ் சினிமா தான்.

அதற்கு காரணம் அதிகப்படியான ரசிகர்கள் வைத்திருக்கும் அஜித், விஜய், சூர்யா போன்றவர்களுடன் ஜோடி போட்டுநடித்ததால் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இப்படி டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வந்த தமன்னா தற்போது சோலோவாக நயன்தாராவை போல இவரும் களமிறங்கி தற்போது நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது வெப்சீரிஸ் பக்கங்களிலும் தலை காட்டி நடித்து வருவதால் அம்மணிக்கு ஏகப்பட்ட மவுசு மீடியா உலகில் தற்போது இருந்து வருகிறது. தமன்னா அவ்வபொழுது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் அவரது அழகை பார்த்து ரசிகர்கள் பலரும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்

இந்த நிலையில் வீடியோ கான்பிரன்ஸ் முலம் பேட்டி ஒன்று கொடுத்தார். அதில் அஜித்-விஜய் போன்றோர் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை கூறி உள்ளார். விஜய் பற்றி கேட்ட போது விஜய் அவர்கள் இன்னும்  இப்பொழுதும் இளமையான ஹீரோ போலவே தான் இருக்கிறார். மேலும் அவரைப் பற்றி எனக்கு பெரிதும் தெரியாது என கூறினார்.

அதன் பிறகு அஜித்தை பற்றி கேட்ட பொழுது அஜித் ஒரு சிறந்த மனிதர் அவர் மிகப் பெரிய ஹீரோ என்பதை எந்த ஒரு இடத்திலும் காட்டிக்கொள்ளாமல் மிக அமைதியாகவும் நல்ல மரியாதை கொடுக்க கூடியவராகவும் சினிமா உலகில்  இவரை போல் இருப்பது ஆச்சரியம் என கூறினார்.

அஜித்துடன் இணைந்து நான் படங்களில் நடித்தபோது அவர் சமைத்த பிரியாணி என்னால் சாப்பிட முடியாமல் போனது ஆனால் இட்லி சாப்பிட்டு இருக்கிறேன் என கூறினார்.