Jailer Movie: ஜெயிலர் படத்தில் இடம் பெற்றிருந்த காவாலா பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரீச் கிடைத்தது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் எங்கு திரும்பினாலும் காவாலா பாடலின் ரீல்ஸ் வீடியோ தான் பட்டையை கிளப்பியது. மேலும் தமன்னா இந்த பாடலுக்கு தனது சிறந்த நடனத்தை வெளிப்படுத்துகிறார்.
எனவே காவாலா பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த தமன்னா டான்ஸ் வீடியோ பட்டித்தொட்டி எங்கும் வைரலாக சின்னத்திரை பிரபலங்கள் முதல் சோசியல் மீடியா பிரபலங்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டு இருந்தனர் வெளிநாடுகளிலும் இந்த பாடல் நல்ல ரீச்சினை பெற்றது.
ஜெயிலர் படம் நேற்று வெளியான நிலையில் ரிலீசான முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்த சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கேரக்டர் மிகவும் குறைவாக பெற்றிருந்தாலும் தமன்னா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் அப்படி நடனத்திலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
இவ்வாறு இந்த பாடலில் தமன்னா தனது வெறித்தனமான நடனத்தை வெளிப்படுத்துகிறார். இவ்வாறு இவருடைய நடன திறமையை இந்த அளவிற்கு வளர்வதற்கு முக்கிய காரணம் இரண்டு பிரபலங்கள் தான் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் முதலில் நடிகர் விஜய்யை கூறலாம், அதாவது விஜய் நடனத்தில் பின்னி பெடலெடுக்கக்கூடிய ஒருவர் அப்படி சுறா திரைப்படத்தில் தமன்னா விஜய்யுடன் இணைந்து நடனமாடி இருப்பார் அப்பொழுது விஜய்யிடமிருந்து பலவற்றை தமன்னா கற்றுக் கொண்டாராம்.
மேலும் இதற்கு அடுத்ததாக பிரபுதேவாவும் தமன்னாவிற்கு எப்படி நடனம் ஆட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார். அதாவது, தமன்னா பிரபுதேவா இருவரும் இணைந்து தேவி படத்தில் நடித்திருந்தனர். படப்பிடிப்பின் பொழுது பணிகளை முடித்துவிட்டு பிரபுதேவாவின் வீட்டிற்கு சென்று தமன்னா நடனம் ஆடுவதை கற்றுக் கொள்வாராம்.