Tamanna : இந்திய அளவில் பிரபல நடிகையாக வருவர் தமன்னா. இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து பெயரையும், புகழையும் பெற்ற தமன்னா நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மீண்டும் படம் பண்ணி வருகிறார் அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர், அரண்மனை 4 படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் காவாலா பாடல் வெளியானது இதில் தமன்னா கிளாமர் குத்தாட்டம் போட்டார். சினிமாவில் காட்டுன கிளாமர் போதும் எனக் கூறிய தமன்னாவுக்கு கால் கட்டு போட தற்பொழுது முடிவெடுத்துள்ளனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
தமன்னாவுக்கு தமிழையும் தாண்டி இந்தி யிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது அப்படி இவர் லவ் ஸ்டோரி 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்த தமன்னா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ரகசிய காதலில் இருப்பதாக இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பார்த்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு தங்களுடைய காதல் லவ் ஸ்டோரி 2 படத்தின் போது துவங்கியதாகவும் சக நடிகர் நிறைய பேர் தன்னுடன் நடித்த பொழுதிலும் அவர்கள் மீது தனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை என்றும் ஆனால் விஜய் வர்மா உடன் அந்த ஈர்ப்பு இருந்ததாகவும் அது தான் ஸ்பெஷல் என்றும் தான் எதிர்பாராத ஒருவர் இவர் தான் எனவும் யார் ஒருவர் அவருக்காக எதையும் மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறோமோ..
அவர்தான் நமக்கானவர் என்றும் விஜய் வர்மா தான் தன்னுடைய மகிழ்ச்சியின் இருப்பிடமே என்று தமன்னா தனது காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்தி இருந்தார். இதனை எடுத்து எப்பொழுது உங்களுக்கு கல்யாணம் என ரசிகர்கள் கேட்டனர் ஆனால் எந்த ஒரு பதிலையும் இந்த ஜோடி சொல்லவில்லை..
இந்த நிலையில் தமன்னாவின் வருங்கால மாமியார் கேள்வி கேட்க துவங்கிவிட்டார் எப்பொழுது இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என கேட்டுள்ளார். இதற்கு நிச்சயம் விரைவில் தமன்னா அல்லது விஜய் வர்மா தரப்பில் இருந்து ஒரு நல்ல செய்தி வெளியாகும் என பலரும் கூறுகின்றனர்.