பையா படத்திற்காக நடுரோட்டில் டிரெஸ்ஸை மாற்றிய தமன்னா.! ரகசியத்தை சொன்ன இயக்குனர்!!

tamanah
tamanah

Tamanna: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. இவர் 2005ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த சாந்த் சே ரோசன் சேகரா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்த அவர் தெலுங்கு வில் சிறி போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழில் 2006 ஆம் ஆண்டு கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் வியாபாரி கல்லூரி இன்று நேற்று நாளை என ஆரம்ப காலத்தில் குடும்பமாக தனது சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தார். அவர் தனது சிறந்த நடிப்பை மேலும் வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.இதனையடுத்து முன்னணி நடிகரின் படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் தக்க வைத்துக்கொண்டார்.

இவர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த பையா என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிகே கொடுத்தார். இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றில் பையா படம் பற்றி கூறியுள்ளார்.அதில் அவர் கூறியது இப்படத்தில் முதலில் நயன்தாரா அவர்கள் தான் நடிக்க இருந்தார்.

paiya
paiya

ஆனால் அவர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ளாததால் இதில் நடிக்காமல் போனது இதைத்தொடர்ந்து அடுத்ததாக தமன்னா படத்தில் கமிட்டாகி ரொம்ப அழகாக நடித்து இருந்தார்.பைபாஸ் ரோட்டில் தான் படத்தோட ஷூட்டிங் பெரும்பாலும் இருந்தது அந்த நேரங்களில் என்கிட்ட கேரவன் இல்லாம இருந்துச்சு அப்ப எல்லாம் டிரஸ் மாதிரி ரெண்டு பொண்ணுங்க கூடவே புடிச்சிட்டு நிப்பாங்க தமன்னா சிரமம் பார்க்காம அதுக்குள்ள போயிட்டு வந்து எல்லாம் கொடுத்திருக்காங்க. ஒரு கம்போர்ட் ஜோன்லதான் எங்க கூட வேலை பார்த்தாங்க என்று கூறியுள்ளார்.