ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்தவர் தளபதி விஜய் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதை ஒவ்வொன்றும் பிரமாதமாக இருக்கிறது அதே சமயம் அதில் இவரது நடிப்பு திறமையை பெரிய அளவில் காட்டுவதால் அந்த படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் அடிக்கின்றன. இதனால் விஜயின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, ஜெயசுதா, ராதிகா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். வாரிசு படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக..
முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நோக்கி படக்குழு நகர்ந்துள்ளது. இது இப்படி இருக்க இந்த படத்தில் இருந்து தொடர்ந்து படம் பற்றியும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லிக் ஆகி வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.
வாரிசு திரைப்படம் ஒரு சென்டிமென்ட் கலந்து படமாக இருந்தாலும் அதே சமயம் இந்த படத்தில் ஆக்சன் காமெடி ஆகிய அனைத்தும் இருப்பதால் நிச்சயம் இந்த படம் அனைவரையும் கவர்ந்திருக்கும் என அண்மையில் இந்த படத்தில் நடித்த சரத்குமார் தெரிவித்தார். அதே போல ஏற்கனவே தயாரிப்பாளரும் இதையே சொல்லி உள்ளார்..
அப்படி என்றால் இந்த படம் நிச்சயம் அனைவரையும் கவர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் நிச்சயம் பெரிய வெற்றியை ருசிக்கும் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படத்தின் இசை அமைப்பாளர் தமன் படப்பிடிப்பு தளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள ஹார்பரில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது ஹார்பரில் ஏதோ ஒரு சண்டைக் காட்சி எடுப்பது போல தெரிய வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..