விஜயின் மனைவி குறித்து பேசி ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளார்.! அட்லீ மனைவி அப்படி என்ன கூறினார் தெரியுமா?

priya
priya

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருபவர் அட்லி. இவர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி என்ற திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகரான விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற அடுத்தடுத்த படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனராக உருமாறி உள்ளார் அட்லி.

விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு விருதைப் பெற்ற அட்லியின் மனைவி பிரியா அவர்கள் மேடையில் பேசியது. தளபதி விஜய்யும் சங்கீதா அக்காவும் இல்லையென்றால் நானும் என் கணவனும் இல்லவே இல்லை என கூறி தெரியப்படுத்தினார் பிரியா. மேலும் அவர் தெறி படத்தில் விஜய்யும், சங்கீதா அக்காவும் எங்களுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எங்கள் வீட்டில் நல்லது கெட்டது என எது நடந்தாலும் இருவருமே போன் செய்து தங்களை நலம் விசாரித்து விடுவார்கள். இதனாலேயே அவர்கள் எங்களுக்கு முக்கியமான நபர்களாக தோன்றுகிறார்கள் என கூறினார்.

தற்போது அட்லி அவர்கள் பாலிவுட்டில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.