திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து ஓடி கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு இன்னமும் ரசிகர்கள் குறையாமல் இருக்கின்றனர் அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படத்தை நல்ல முறையில் கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் இப்பொழுது தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர்..
படத்தில் ரஜினி விருவிருப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியுடன் இவர் கை கோர்க்க இருப்பதாக ஒரு தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வேகம் எடுத்து வருகிறது.
அதாவது 1995 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் பாட்ஷா இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நக்மா, ரகுவரன், ஆனந்த்ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகியிருந்தது படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த படத்தின் வெற்றியால் ரஜினியின் சினிமா பயணம் கிடுகிடுவென உயர்ந்தது இந்த படத்தில் ஆக்சன் பிரமாதமாக இருக்கும் அதே சமயம் பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்குகள் ஒவ்வொன்றும் தெறிக்கவிடும் அந்த அளவிற்கு இயக்குனர் பார்த்து பார்த்து வசனங்கள் வைத்திருப்பார். பாஷா படத்தில் மிகவும் ஃபேமஸான வசனம் என்றால் “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” என இடம் பெற்றிருக்கும் ஆனால் உண்மையில் அந்த வசனம் அப்படி எழுதப்படவில்லை..
நான் ஒரு வாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்ன மாதிரி என எழுதி இருக்கிறார்கள். ஆனால் இது மாசாக பொருந்தவில்லை என்று நினைத்த ரஜினிகாந்த் அந்த காட்சி படமாக்கப்பட்ட பொழுது “ஒரு வாட்டி” என்ற வார்த்தையை ஒரு தடவை என மாற்றி நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என வசனத்தை பேசி உள்ளார் ரஜினி. பின் படம் வெளிவந்து அந்த வசனம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போய் பெரிய அளவில் வைரல் ஆனது.