நமீதா மாரிமுத்து குறித்து பேசிய பிக்பாஸ் 4 – வின்னர் ஆரி – என்ன சொன்னார் தெரியுமா.?

aari

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான படங்களில் நடித்து மக்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஆரி. அதிலும் குறிப்பாக இவர் நடித்த நெடுஞ்சாலை திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்து அதுமட்டுமல்லாமல் அதில் இவரது நடிப்பு சூப்பராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமாவில் ஓடிக்கொண்டிருந்தாலும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது. இப்படி பயணித்து கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டினார் இவருக்கு எதிராக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு அனைவரும் எதிர்த்து நின்னாலும் நான் இப்படித்தான் என கூறி நேர்மையாக இருந்தார்.

மற்றவர்களிடம்  பெரிய அளவில் நெருக்காமல் இல்லை.. பிரச்சனையை சந்தித்தாலும் அதில் நேர்மையான பேசி வெளியே வந்ததால் இவர் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த நாயகனாக பிக்பாஸ் வீட்டிலேயே மாறினார் மேலும் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை அழகாக தட்டி தூங்கினார். வெளியே வந்த அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் பூந்தமல்லியில் சொல் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் பின் பேசிய அவர் பள்ளி திறப்பது சந்தோஷமான விஷயம் குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்று படித்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முழுமை பெறவேண்டும் என கூறினார்.

namitha marimuthu
namitha marimuthu

மேலும் அவர் பேசியபோது பிக்பாஸ் குறித்தும் பேசி உள்ளார் அதில் அவர் கூறியது பாஸ் வீட்டில் இதுவரை ஆண் பெண் என பலர் கலந்து கொண்டுள்ளனர் தற்போது முதல்முறையாக திருநங்கை கலந்துகொண்டது வரவேற்கத்தக்கது ஆனால் அவர் திடீரென வெளியேறியது ஏன் என்று தெரியவில்லை சான்றிதழ் கூட ஆண்-பெண் ஆகியவர்களுக்கு இருக்கிறது. மூன்றாம் பாலினம் என்பது இல்லை அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்