சினிமா உலகில் நடிகர் நடிகைகள் நடிப்பதையும் தாண்டி தனது சினிமா உலகில் சில கட்டுப்பாடுகளை விதித்து அதை நல்ல முறையில் நடத்த நடிகர் சங்க தேர்தல் நடத்துவது உண்டு அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது இதில் நாசர் அணி வெற்றி பெற்று கடந்த மார்ச் மாதம் புது பொறுப்பை ஏற்றுக் கொண்டது .
நாசர் ஒரு அணி, பாக்யராஜ் ஒரு அணி போட்டியிட்டது இதில் நாசர் அணி வெற்றி பெற்றார். இந்த குழு தொடர்ந்து பல்வேறு சிறப்பான செயல்களை செய்ய திட்டமிட்டுள்ளது. தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் இருக்கின்றனர். சமீபத்தில் நடிகர் சங்க தேர்தலின் 66 வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது இதில் பல விஷயங்கள் பேசப்பட்டது அதில் ஒன்றாக..
ஏற்கனவே ஒரு கட்டிடம் ஒன்று கட்டி வருகிறது இந்தப் பணி இன்னும் முடிய 40% வரை தேவை அதற்கு சுமார் 30 கோடி செலவாகும் என கூறப்படுகிறது இதை கடன் வாங்கி கட்ட முடியாது என்பதால் தற்போது ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது அதாவது தமிழ் சினிமா உலகில் பல டாப் நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களிடம் நிதி திரட்டி அதைக் கட்ட முடிவு எடுத்துள்ளது குழு.
அந்த வகையில் பொருளாளராக இருக்கும் நடிகர் கார்த்தி ஒரு திட்டத்தை தீட்டி உள்ளார் அது என்னவென்றால் கடன் வாங்கி கட்டடம் கட்டுவதை விட ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர்களை சந்தித்து ஆளுக்கு 2 கோடி முதல் வசூல் செய்து கட்டிடத்தை கட்டிவிடலாம் என கூறி வருகிறாராம்.
அதற்கு ரஜினி, கமல், விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர் ஆனால் அஜித்தை தற்போது வெளிநாடுகளில் இருப்பதால் அஜித்தை சந்திக்க முடியாமல் கார்த்தி இருக்கிறார். இருபின்னும் அஜித் தனது 61வது திரைப்படத்தின் இரண்டாவது ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் போது அவரை நேரில் சந்தித்து விஷயத்தை சொல்லிவிடலாம் என கார்த்தி இருக்கிறாராம்.