தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் தல அஜித். இவருக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் அப்டேட் வேண்டும் என்று பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உட்பட இன்னும் ஏராளமான பலரிடம் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று ரசிகர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் தல அஜித் இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சொன்ன அறிவுரையால் தற்போது அமைதியாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த நடிகை ஒருவர் அஜித் இதில் கில்லாடி தான் என்று கூறி அவரைப் பாராட்டி உள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் அந்த நடிகை நடிக்கிறார் என்று உறுதியாகியுள்ளது.
வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக படபிடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருக்கும் நிலையில் இப்படம் விரைவில் ரிலீஸ்சாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தல அஜித்துடன் இணைந்து நடித்த பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடிப்பது உறுதியாகியுள்ளது. அவர் ஒரு பேட்டியில் வலிமை திரைப்படத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சிக்காக ஹீமா குரோஷிக்கு பைக் ஓட்டுவதற்கு தல அஜித் தான் சொல்லிக் கொடுத்தாராம். அது மட்டுமல்லாமல் எப்படி பைக் ஓட்ட வேண்டும் என்பதற்கு சில டிப்ஸ்களும் தந்தாராம்.
இந்த படத்தில் தல அஜித் மற்றும் ஹீமா குரோஸி இருவரும் இணைந்து அந்த ஸ்டண்ட் காட்சியில் நடித்திருப்பார்கள்.இதுதான் இப்படத்தின் ஹைலைட் என்றும் கூறி உள்ளார். இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த தகவல்களை அறிந்த ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.