தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் சிறுத்தை சிவா இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, குஷ்பு, மீனா கீர்த்தி சுரேஷ் யோகி பாபு போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் இருந்து பல்வேறு பாடல்களும் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த வகையில் இத்திரைப்படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டது.
அந்தவகையில் இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது ஏனெனில் இந்த திரைப்படத்தின் டிரைலர் பார்க்கும் பொழுது சிவா இயக்கிய பழைய திரைப்படத்தின் இரண்டாம் பாகம் போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி உள்ளார்கள்.
ஏற்கனவே சிவா இயக்கத்தில் அஜீத் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விசுவாசம் அந்தவகையில் அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது விசுவாசம் திரைப்படம் போலவே இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் விசுவாசம் திரைப்படத்தில் அப்பா மகள் பாசம் என்பதுபோல அண்ணாத்த திரைப்படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து எடுத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் ஒரே வில்லன் ஒரே கதாநாயகி என்பது போலவே கிராமத்தில் ஆரம்பித்து நகரத்தில் திரைப்படம் முடிவடைகிறது.
சும்மா சொல்லக்கூடாது சுட்ட தோசையை திருப்பி திருப்பி சுட்டுள்ளார் நமது சிவா இதனால் தியேட்டரில் அண்ணாத்த திரைப்படம் எப்படி வெற்றி காண போகிறது என்பது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ஏற்கனவே படு தோல்வி அடைந்தது அந்தவகையில் எப்படியாவது ஒரு மெகா ஹிட் திரைப்படத்தை நமது தலைவர் கொடுப்பார் என்று எண்ணியிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை இத்திரைப்படம் கொடுத்து விடுமோ என ரசிகர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.