வெள்ளித்திரையில் தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் வலிமை படத்தில் இருந்து ஏதாவது ஒரு அப்டேட் வெளிவருமா எனவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் சமீபத்தில் வலிமை படபிடிப்பில் தல அஜித்துடன் ஒரு ரசிகர் எடுத்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.
அதேபோல் தல அஜித் ஹைதராபாத்தில் படப்பிடிப்பின் போது அங்கு பைக் வீலிங் செய்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.
இந்நிலையில் தல அஜித்தை பற்றிய ஒரு பரபரப்பான தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் அஜித் தனது பைக்கிலேயே சிக்கிம் வரை சென்றுள்ளாராம்.
மேலும் அங்கிருந்து திரும்புவதற்கு கிட்டத்தட்ட 4,500 கிலோ மீட்டர் பயணம் செல்ல வேண்டுமாம் தற்போது இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.