தமிழ் திரையுலகில் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் தல அஜித் இவர் தனது 50வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இவரது ரசிகர்கள் பலரும் தல அஜித் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார்கள் ஆனால் ஒரு சில ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள்.
ஏனென்றால் தல அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக போனிகபூர் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தார் ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து நேற்று வலிமை பஸ்ட் லூக் வெளியாகவில்லை இதனால் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் தான் இருந்தார்கள்.
தல அஜித் பொதுவாகவே உதவி செய்யும் குணம் உடையவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் அவர் நிறைய உதவிகளை மறைமுகமாக ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு செய்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
மேலும் இவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இவரது நண்பர்கள் உறவினர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள் இந்நிலையில் தல அஜித் தனது காதல் மனைவி ஷாலினியுடன் தனது 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.
ஆம் அவர் தனது மனைவியுடன் பிறந்தநாளைக் கொண்டாடும் பொழுது எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.