மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்த படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்களும் மக்களும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். அதனால் நல்ல வசூலை அள்ளும் என கணக்கிடப்பட்டது.
முதல் நாள் மட்டுமே சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் சுமார் பத்து கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளும் என தெரிவிக்கப்படுகிறது. இப்படி இருக்க சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்துவிட்டு நடிகர்களும் தனது கருத்துக்களை கூறி வருகின்றனர் அந்த வகையில் நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனை அறிந்த தனுசு ரசிகர்கள் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு முன்பாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளிவந்தது அதற்கு நன்றி தெரிவிக்க தோணவில்லை.. அது சரி..
திருச்சிற்றம்பலம் ஃபிளாப் ஆகும்னு நினச்ச.. ஆனா ஓடிடுச்சி..அதுக்குதான் ஆடக்கூடாது… தனுசுக்கு நன்றியோடு இருக்கணும் கடவுள் பாத்துகிட்டு இருக்கார் என பதிவிட்டனர் மேலும் பலரும் பல்வேறு விதமான கமெண்ட்களின் மூலம் சிவகார்த்திகேயனை கிழித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயனிடம் திறமை இருக்கு அவரை பெரிய ஆளாக மாற்றி விட வேண்டும் என போராடியவர் தனுஷ் தான் அதற்காக சிவகார்த்திகேயனின் பல படங்களை தயாரித்தவர் பல வாய்ப்புகளை தனுஷ் தான் பெற்றுக் கொடுத்தார் ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டார் எனவும் சொல்லி வருகின்றனர் இந்த பதிவுகள் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.