பாலிவுட்டில் கிங்காங் என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தார் ஆனால் இவரது மகன் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியதை தெரிந்து உடனடியாக அனைத்து படங்கள் நிறுத்திவிட்டு தனது மகனுக்காக வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு வந்தார்.
தனது மகனை மீட்க பெரிய பெரிய வைக்கீல் எல்லாம் அழைத்து என்னென்னமோ பண்ணிப் பார்த்தார் ஆனால் மூன்று வாரங்கள் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜெயிலில் தான் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இதனால் ஷாருக்கான் ஒரு கட்டத்திற்கு மேல் லண்டனிலிருந்து வழக்கறிஞர்களை வரவழித்து எப்படியாவது தனது மகனை மீட்டு விட வேண்டும் என்பதற்காக பல கோடிகளை கொடுத்து வாதாடா வைத்தார்.
அதற்கு ஏற்றார்போல மூன்று வாரங்கள் கழித்து சமீபத்தில் இந்த பிரச்சனைக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்தது ஒரு வழியாக ஜாமீன் கேட்டு தனது மகனை வெளியே எடுத்து தற்போது தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உள்ளார். ஷாருக்கானும் தனது மகனைப் பிரிந்து இருந்ததால் உணவே சாப்பிடாமல் மூன்று வாரங்கள் டீயை குடித்து மட்டுமே அங்குமிங்கும் சுற்றி திரிந்து உள்ளார்.
தற்போது தனது மகன் வருவதை அடுத்து அவர் வருவதற்கு முன்பாகவே வீட்டை அலங்காரம் படுத்தி மின்னும் விளக்குகளை பொருத்தி செம சூப்பராக செய்து வைத்திருந்தனர். ஷாருக்கானின் மனைவியும் ஆரியன் கானின் தாயுமான கௌரிகான் இனிப்புகளை செய்து வீட்டில் அசத்தி உள்ளார்.
இந்த தீபாவளியை வேற லெவலில் கொண்டாட தற்போது ஷாருக்கானும் அவரது குடும்பமும் ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதோ ஷாருக்கான் வீட்டை நீங்களே பாருங்கள்.