shivanibiggboss

கூண்டுக்குள் அடைக்கப்பட்ட ஷிவானி நாராயணன்!! வைரலாகும் ப்ரமோ வீடியோ…

shivani and jithan ramesh locked in glass room promo video: பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று மிக சிறப்பாக போய் கொண்டிருந்தது. இந்நிலையில் v j அர்ச்சனா அவர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்களுக்கு அர்ச்சனா அவர்கள் பட்டம் அளித்தார். அந்த படத்தின் மூலம் மக்கள் மனதில் உங்களுக்கு என்ன இடம் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என கூறினார்.

இந்த நிலையில் நேற்று ஷிவானிக்கு அர்ச்சனா அவர்கள் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் என்ற விருதை வழங்கினார். அதோடு சில அட்வைசையும் பண்ணினார். நீங்கள் சீரியலில் லீடிங் ரோலில் நடித்திருக்கிறீர்கள் உங்களுக்கு நிறைய திறமை இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இங்கு இருக்கும் இடமே தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது இனிமேலாவது விளையாடுங்கள் என கூறிகிறார்.

மேலும் இந்த நிலையில் இன்று வெளிவந்த ப்ரமோவில் பிக் பாஸ் வீட்டில் ஈடுபாடு குறைவாக உள்ள இரண்டு நபர்களை தேர்ந்தெடுக்கும்படி போட்டியாளர்களிடம் பிக்பாஸ் அறிவிக்கிறார். அதனால் போட்டியாளர்கள் சிவானியையும் ஜித்தன் ரமேஷ்ஷயும் தேர்வு செய்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து சிவானியையும் ஜித்தன் ரமேஷ்ஷயும் பிக் பாஸ் வீட்டில் கண்ணாடி அறைக்குள் வைத்துப் பூட்ட உத்தரவிடுகிறார். இவர்கள் இருவரையும் கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டியது ரசிகர்களுக்கு ஷாக் ஆக உள்ளது.

இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த போட்டியில் மிஸ்டர் பிக் பாஸ், மிஸ் பிக் பாஸ் என பட்டத்தினை வென்றார்கள் அப்படி இருக்கும்போது எப்படி ஈடுபாடு இல்லை என கூறலாம் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. வைரலாகும் ப்ரமோ வீடியோ.

bb4-archana

எவன் அவன்? அர்ச்சனாவின் ஆட்டம் ஆரம்பம்!! வைரலாகும் ப்ரமோ வீடியோ.

VJ Archana started her game against housemates video:இன்று ஒளிபரப்பான முதல் ப்ரமோவில் vj அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்தார் என்பது தெரிந்தது. ஒரு வாரம் நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்து வீட்டிற்குள் வந்தவுடன் ஒவ்வொரு போட்டியாளர்களின் மனப்பான்மை நன்றாக தெரியும் என்ற காரணத்தால் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்.

மேலும் அதனைதொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் சுரேஷ் சக்கரவர்த்தியின் சமையல் பிடிக்காதவர்கள் யார் என என்று அர்ச்சனா கேள்வி எழுப்புகிறார். அதற்கு அங்கு உள்ள ஒருவர் அவரிடம் பிடித்ததே சமையல்தான் என குரல் கொடுக்க யார் அது என அர்ச்சனா கேட்க அதற்கு சுரேஷ் அதை சொன்ன வன தான் கேட்கணும் என கூறுகிறார்.

அதற்கு அர்ச்சனா கேட்டு சொல்லுங்களேன் என்று கேட்க அதற்கு பதில் அளிக்கும் வகையில் சுரேஷ் அனுப்பி வைங்க கேட்டு சொல்றேன் என பதிலடி கொடுக்கிறார். மேலும் அர்ச்சனா வந்த சில மணி நேரங்களிலேயே ஹவுஸ் மேட்களை கலாய்க்க ஆரம்பித்ததால் என்ன நடக்கப்போகுது என புரிந்து கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி அங்கிருந்து விலகி சென்று விடுகிறார்.

இதோ அந்த ப்ரமோ வீடியோ.

archana

V Jஅர்ச்சனா என்ட்ரி!! கலைக்கட்டிய பிக்பாஸ் வீடு.!! வைரலாகும் ப்ரமோ வீடியோ…

archana entry biggboss promo video:நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாரும் எதிர்பாராத வண்ணம் மிக சுவாரஸ்யமாக இருந்தது. முதலில் நடந்த டான்ஸ் ஷோவில் சுரேஷ் சக்கரவர்த்தியும் அனிதா சம்பத்தும் மிக அழகாக பாட்டிற்கு ஏற்றார் போல் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்கள்.

பின்னர் அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் ஒரு போட்டியை அறிவித்தார். அந்தப் போட்டியில் வீட்டில் உளள் ஹவுஸ் மேட்கள் 16 பேரும் 2 நபர்களாக பிரிந்து ஒரு பௌலில் பாலை போடவும் அப்படி போடுபவர்கள் அவர்கள் சொல்லும் ஒரு நபர் வெளியே செல்லனும் இப்படி ஒவ்வொருவராக வெளியே வந்ததும் கடைசியாக இருக்கும் ஒரு டீம் அதாவது இரண்டு பேர் ஜெயித்ததாக அர்த்தம்.

அப்படி கேமில் ஜெயித்தவர்கள் சனம் ஷெட்டி வேல்முருகன் அவர்கள் இருவரையும் இந்த வாரம் எலிமினேஷனுக்கு யாரும் நாமினேட் செய்ய முடியாது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்கு அர்ச்சனா வருவதாக இணையதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு இருந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளிவந்த ப்ரமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு அர்ச்சனா வந்துள்ளார். மேலும்  பிக் பாஸ் வீட்டில்  இனிமேல் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது எனவும் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ.