சினிமா உலகில் நடிகர் நடிகைகள் படத்தில் நடித்துவிட்டு போய்விடுகின்றனர் ஆனால் அந்த படத்தை எடுக்க மிகவும் பாடுபடுபவர்கள் இயக்குனர்கள் தான். இயக்குனர்கள் படத்தின் கதையை எழுதிவிட்டு அதை நாம் நினைப்பது போல கொண்டு வர அவர்கள் படும் பாட்டு கொஞ்சநஞ்சம் அல்ல..
அண்மைக்காலமாக இயக்குனர்கள் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றாக வெளி வருகிறது இயக்குனர்கள் பெரிய அளவில் பிரபலமடைகின்றனர். அப்படி நடிகராக உருவாகி தனது திறமையை வளர்த்துக் கொண்டு இயக்குனர் அவதாரம் எடுத்து வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு இவர் சென்னை 600028 என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து மங்காத்தா, சிம்புவை வைத்து மாநாடு என அடுத்தடுத்த படங்களை இயக்கி அசதி உள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான மன்மத லீலை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது அதனை தொடர்ந்து அடுத்தடுத்த சிறந்த நடிகர்களுடன் கைகோர்த்து புதிய படங்களையும் எடுக்க ரெடியாக இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் வெங்கட் பிரபு குறித்து ஒரு சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். நாங்கள் எல்லாம் ஸ்கிரிப்ட் எழுதிவிட்டு ஸ்பாட்டுக்கு போன உடனே ஸ்க்ரிப்டை பார்த்து படம் எடுப்போம் ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் வெங்கட் பிரபு ஸ்கிரிப்ட்ல ஒன்னு இருக்கும் ஸ்பாட்ல வேற ஒன்னு எடுப்பாரு.
ஸ்பாட்ல போயிட்டு யோசிக்கிற திறமை வெங்கட்பிரபுக்கு அதிகம் என கூறி அதிர வைத்தார். அதை நான் சென்னை 600028 படத்தின் ஷூட்டிங்ல பார்த்திருக்கேன். ஒரு தடவை ஸ்கிரிப்ட்ல வேற ஒன்னு எழுதி இருந்தது ஆனா எடுத்தது வேற இருந்தாலும் அதுவும் ரொம்ப பிரமாதமாக இருந்தது என கூறினார் பா ரஞ்சித்