தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமாக நடித்து வந்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்வதற்கு தன்னுடைய கடின உழைப்பை செலுத்தி வரும் முக்கிய நடிகர் இவர் உதாரணமாக நான் ஈ திரைப்படத்தில் இவர் பட்ட கஷ்டங்களை நாம் பார்த்தோம்.
இவ்வாறு இவரின் கடின உழைப்பாளர் இவருக்கு என பல ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விக்ரம் எனக்கு சிறிய வயதில் இருந்த ஆசையை பற்றி கூறியுள்ளார். அதாவது பல தகவல்களை பகிர்ந்து கொண்ட இவர் முக்கியமான ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது சிறிய வயதில் இருந்து எனக்கு டாக்டராக வேண்டுமென்று தான் ஆசை, எனது குடும்பமும் அதற்கு தான் ஆசைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் மார்க் குறைவாக இருந்ததன் காரணமாக மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் போய்விட்டதாக கூறியுள்ளார். மேலும் விக்ரம் டாக்டர் படிக்க தான் வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே பல் மருத்துவராக படித்து விடலாம் என முயற்சி செய்தாராம்.
ஆனால் அதற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன் படிப்பு முடிந்தவுடன் நடிப்பில் ஆர்வம் வந்ததால் சினிமாவிற்கு நுழைந்து தனது அசுரன் நடிப்பால் அனைவரையும் கவர வைத்தேன் மேலும் என்னுடைய கடின உழைப்பை போட்டதால் எனக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது என கூறியுள்ளார்.
இவ்வாறு நடிகர் விக்ரம் எப்பொழுதும் தனது கடின உழைப்பை போட்டு நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு ஏற்றார் போல் தனது உடலை வருத்திக்கொண்டு மாறுவார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.