பொதுவாக நடிகர் மற்றும் நடிகைகள் வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சின்னத்திரைக்கு படையெடுப்பார்கள் ஆனால் சமீபகாலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர் மற்றும் நடிகைகள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
அந்த வகையில் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த பல நடிகர் மற்றும் நடிகைகள் வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் சுவாமிநாதன்.
இந்த நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்ததால் நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்தார் இவர் போகப்போக வெள்ளித்திரையிலும் கால்தடம் பதிக்க ஆரம்பித்தார் இப்பொழுது தமிழ், மலையாளம் என பல மொழிகளிலும் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.
தன்னுடைய ஆரம்பக் காலகட்டத்தில் ஆனந்தம், மெட்டி ஒலி ,கோலங்கள் தென்றல், கனா காணும் காலங்கள் ஆகிய தொடர்களிலும் நடித்து வந்தார் சினிமாவில் முதன் முதலாக ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியாகிய நான் சிவப்பு மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
அதன் பிறகு சுவாமிநாதன் அவர்கள் சிங்காரவேலன், உடன்பிறப்புகள் அருணாச்சலம், தோரணை, வேலாயுதம், தில்லுமுல்லு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், அரண்மனை, ராஜா ராணி, மாப்பிள்ளை, சிங்கம், சீமராஜா என பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு சந்தானம் ஆகிய முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இந்தநிலையில் லொள்ளு சபா சுவாமிநாதன் அவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும் மற்றும் மகளும் இருக்கிறார்கள் தற்பொழுது தன்னுடைய மகன் மற்றும் மனைவி மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
அவரின் மகள் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.