சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எதிர்நீச்சல் திரைப்படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்தான் சுசா குமார். இப்படத்தில் நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணாலே என்ற பாடலில் இடம் பெற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சுசா குமார்.
இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் அவரின் நடிப்பில் வெளிவந்த வீரம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் அம்மணி. இதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவி தொகுப்பாளரும், நடிகருமான மா.க.பா ஆனந்துக்கு ஜோடியாக மாணிக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் சமீபகாலமாக அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காததால் சற்று வருத்தத்தில் இருந்து வந்தார் இருப்பினும் நல்ல கதையம்சம் உள்ள கதைகள் வந்தால் ஏற்று நடிப்பேன் என காத்துக் கொண்டிருக்கிறார்.
ஊரடங்கு உத்தரவில் ரசிகர்கள் தன்னை மறந்து விடாமல் இருக்க சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது அவர் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.
இதோ அந்த புகைபடம்.