நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைத்து தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த படத்திற்கு முன்பாக நடிகர் சூர்யா நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிட காட்சிகளில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டியிருந்தார்.
அந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்துப் போகவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். நடிகர் சூர்யா சினிமா உலகில் ஹீரோ, குணச்சித்திர கதா பாத்திரங்களில் நடித்து உள்ளார். முதன் முறையாக கமலின் விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தில் ROLEX கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதற்காக உலகநாயகன் கமலஹாசன் தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாகக் கொடுத்து இருந்தார். விக்ரம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா நீண்ட முடியில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு நீண்ட முடியை வளர்க்க வில்லை. கொரோனா பரவல் ஊரடங்கு இருந்ததால் நீண்ட முடியை வளர்த்து உள்ளார்.
சூர்யாவின் நீண்ட முடியை பார்த்து அவரது தம்பி சந்தேகப்பட்டு எதற்காக இவ்வளவு நீண்ட முடி வளர்கிறாய் எனக் கேட்டுள்ளார். நான் தான் பொன்னியின் செல்வன் படத்திற்காக இவ்வளவு முடி வளர்க்கிறேன். நீ எதற்கு அதிகமாக முடி வளர்க்கிறாய் என சந்தேகப்பட்டு கேட்டுள்ளார் அதற்கு சூர்யா இப்படி நீண்ட முடி வளர்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது அதனால் சும்மா முடி வளர்த்து பார்க்கிறேன் என கூறினார்
சூர்யாவின் இந்த கேட்டப்பை பார்த்து இயக்குனர் அஜய் ஞானவேல் ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞராக கதாபாத்திரத்திற்கு சூர்யா சரியாக இருப்பார் என கூறி படத்தில் கமிட் செய்தார். இதையே நீண்ட முடி உடன் தான் விக்ரம் படத்தில் நடித்தார் அடுத்ததும் வாடிவாசல் படத்திலும் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.