சிம்புவின் புதிய திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட்டிற்க்கே ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு.! கொண்டாடும் ரசிகர்கள்

simbu-laest

நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஏனென்றால் கொரோனா ஊரடங்காள் அதிக கூட்டத்தை வைத்து படத்தை எடுக்க முடியாத சூழ்நிலையால் படப்பிடிப்பு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிம்பு தற்பொழுது சுசீந்திரனின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மாநாடு திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே இந்த திரைப்படத்தில் நடித்து முடித்துவிடலாம் என படக்குழு ஆரம்பித்துள்ளது.

ஒரு காலகட்டத்தில் சிம்பு என்றாலே இயக்குனர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் ஓட்டம் பிடிப்பார்கள் ஆனால் சமீபகாலமாக சிம்புவின் மாற்றத்தை பார்த்து பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து தான் படத்தை எடுக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.

ஆனால் அதற்கு காரணம் என்னவென்றால் சிம்பு தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து அதன் வீடியோவை வெளியிட்டது தான் அதைப் பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்தார்கள், நூறு கிலோவிலிருந்து சிம்பு தனது உடல் எடையை 70 கிலோ வரை குறைத்துள்ளார்.

இந்நிலையில் சிம்பு மற்றும் சுசீந்திரன் இணையம் திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வருகிற 26-ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு 12.12 வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

str motion poster
str motion poster