படபிடிப்பு தளத்தில் சூர்யா அனுபவித்த கொடுமை. வணங்கான் ரகசியம்.! உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம்…

surya
surya

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் இயக்குனர் பாலா உடன் இணைந்து வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் ஏற்பட்ட சில கதையின் மாற்றத்தால் சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியேறியதியாக இயக்குனர் பாலா அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

ஆனால் வணங்கான் திரைப்படம் நிறுத்தப்பட்டதற்கு இது காரணமில்லை என்று பிரபலம் ஒருவர் பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது பாலாவின் படத்தை எந்த தயாரிப்பாளர்கள் யாரும் தயாரிக்க முன் வராததால் வீட்டிலேயே முடங்கி கிடந்தார் பாலா. இதை பார்த்து சூர்யாவின் தந்தை சிவக்குமார் உனக்கு வாழ்க்கை தந்த இயக்குனர் அவர்தான் அவர் இப்படி இருப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது அதனால் பாலாவிற்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.

இதை பாலாவிடம் கூறிய போது சூர்யாவிற்கான கதை இருக்கிறது என்று கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் கடலோரப் பகுதிகளில் வாழும் ஒரு மீனவனின் கதை தான் என ஓன் லைன் கதையாக சூர்யாவிடம் கூறியிருக்கிறார். இந்த ஓன் லைன் கதையும் பிடித்து போய் சூர்யா அந்த படத்தில் நடிக்க முழு சம்பளத்துடன் சென்று இருக்கிறார்.

கடலோரப் பகுதியில் செட் போட்டு ஆரம்பித்த வணங்கான் திரைப்படத்தின் கதையை சூர்யாவிடம் முழுமையாக சொல்லவில்லையாம் பாலா. இதை இந்த படத்தின் கதை என்னவென்று சூர்யா பாலவிடம் போய் கேட்டு இருக்கிறார் அதற்கு பாலா அவர்கள் கதையெல்லாம் சொல்ல முடியாது கதை தெரிந்தால் தான் நடிப்பியா என்று சிரித்தபடியே கேட்டிருக்கிறாராம்.

நமக்கு வாழ்க்கைத் தந்த இயக்குனர் என்பதால் பொறுத்து இருந்த சூர்யா தற்போது கதை கேட்கும் நேரமில்லை அதுவும் இல்லாமல் அவர் கூறும் நிலைமையிலும் இல்லை என்று புரிந்து கொண்ட சூர்யா அந்த இடத்தை விட்டு வெளியேறினாராம். பின்னர் ஒருரிரு நாட்கள் கழித்து மறுபடியும் சூர்யா அவர்கள் பாலா அவர்களிடம் இந்த கதையை முழுமையாக கேட்டிருக்கிறார் ஆனால் கதை எல்லாம் கூற முடியாது என்று சூர்யாவிடம் கூறியிருக்கிறார்.

இதனால் கடுப்பான சூர்யா தன்னுடைய அப்பாவிடம் தெரியப்படுத்தி இருக்கிறார். அப்போது சிவகுமார் அவர்கள்  இயக்குனர் நல்ல இயக்குனர் அவருடைய நடவடிக்கை சரியில்லை அதனால் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் இதனால் சூர்யாவும் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்திருக்கிறார் கிட்டத்தட்ட பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

ஆனால் சூர்யா அவர்களை சூட்டிங் என்ற பெயரில் பாறைகளின் மேல் ஏறி நிற்க வைத்து உள்ளாராம் அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு நாள் முழுக்க பாறையில் நின்று கொண்டிருந்தாராம். மேலும் அந்த கடலோர மணலிலும் ஓடவைப்பாராம். இப்படியே போய்க் கொண்டிருந்தது இதை அறிந்த சூர்யா பாலாவிடம் காட்சிகள் ஒன்று படமாக்கப்பட்டது போல் தெரியவில்லையே என்று கேட்டுள்ளாராம். அப்போது பாலா எதுவுமே கூறவில்லையாம்.

இப்படி நாட்கள் கடத்தி தயாரிப்பு நிறுவனத்தில் செலவில் வாழ்ந்து வந்திருக்கிறாராம் பாலா. இதனால் நடிகர் சூர்யா அவர்கள் அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து அடுத்த மறுநாள் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பி விட்டாராம். காலையில் வந்து பார்த்த பாலா நடிகர் எங்கே, நடிகர் எங்கே என்று கேட்டிருக்கிறார். சூர்யா அவர்கள் படப்பிடிப்பு தளத்தை நிறுத்திவிட்டு சென்னை கிளம்பியது தெரிந்தவுடன் பாலாவும் தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு அவர் ஒரு பக்கத்திற்கு சென்று விட்டாராம்.

அதன் பிறகு  நீண்ட நாள் கழித்து சூர்யா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பாலா படபிடிப்பு எப்போது ஆரம்பிப்பார் என்று தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று ஒரு ட்விட்டை பதிவு செய்தார் அதன் பிறகு இருவரும் சுமூகமாக பேசிக்கொண்ட பின்னர் மறுபடியும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தது. நந்தா படத்தில் சூர்யா எப்படி இருந்தாரோ அப்படித்தான் இருக்கிறார் என்று நினைத்து கொண்ட பாலா படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவை அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

அதாவது சூர்யாவின் காட்சிகள் வரும்போது யோவ் சூர்யா வாயா போயா என்று கூறி இருக்கிறாராம் அது மட்டுமல்லாமல் ஒரு சில சமயம் வாடா போடா என்று கூட கூறியிருக்கிறாராம் பாலா. இதையெல்லாம் சகித்துக் கொண்டு இருந்த சூர்யா ஒரு கட்டத்திற்கு மேல் இந்தப் படம் ஒழுங்காக ஓடாது என்று எண்ணி பாலாவிடம் இந்த படத்தை பாதையில் நிறுத்தி விடுங்கள் என்று கூறிவிட்டு வணங்கான் படத்திலிருந்து விலகினாராம் சூர்யா.

அது மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இயக்குனராக இருக்கிறீர்கள் அதனால் நீங்களே சென்று இந்த மாதிரி கூறி உங்களுடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம் சூர்யா. வணங்கான் படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வணங்கான் படத்தின் பாதி நிறைவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறாராம் சூர்யா. படம் முழுமையாக முடிவதற்குள் இன்னும் எவ்வளவு கோடி செலவாக இருக்கும் என்று எண்ணி  இந்த படம் நன்றாக ஓடாது என்று கணித்து கொண்ட சூர்யா இந்த படத்தை பாதையில் நிறுத்திவிட்டாராம் தற்போது சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கம் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.