கே ஜி எஃப் 2 திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா செய்யயுள்ள சிறப்பான சம்பவம் – அதிர்ச்சியில் தமிழ் சினிமா ரசிகர்கள்.!

KGF
KGF

சினிமா உலகம் புதியதை நோக்கி ஓட ஓட நடிகர்களும், இயக்குனர்களும் தன்னை மாற்றிக்கொண்டு அசத்துகின்றனர் அந்த வகையில் கன்னட சினிமாவை தற்போது தூக்கி நிறுத்தி உள்ள திரைப்படம் தான் கேஜிஎப். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் எச்டி தரத்திலும் நடிகர், நடிகைகளின் நடிப்பு மிரட்டும் வகையிலும் படம் முழுவதும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

இந்த படம் கன்னடத்தையும் தாண்டி மற்ற மொழிகளிலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனால் கன்னட நடிகர்களும் தற்போது ஆங்காங்கே தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர் அந்த வகையில் கே ஜி எஃப்  பட நடிகர் யாஷ் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்து உள்ளார்.

யாஷ் KGF படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கை கோர்த்து கேஜிஎஃப் இரண்டாம் பாகம் உடனடியாக எடுக்கப்பட்டது ஆனால் தொடர்ந்து தடைகளை சந்தித்ததால் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு வழியாக படம் ஏப்ரல் 14ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியாக இருப்பதாக படக்குழு கூறியது.

இதனையடுத்து பல்வேறு அப்டேட்களை அடுத்தடுத்து கொடுத்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் கே ஜி எஃப் 2 ம் பாகத்தின் ட்ரைலர் கூட  வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது இந்த டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட இருப்பதாக தெரிய வருகிறது.

ஏற்கனவே கேஜிஎஃப் 2 படத்துக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்ற நிலையில் ட்ரெயிலர் வெளிவந்து சிறப்பாக அமைந்து விட்டால் KGF படதுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும் அதே சமயம் பீஸ்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற தவறினால்  கேஜிஎப் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை பெறும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை..