தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு தரப்பு மக்களையும் கவர்ந்த ஒரு திரைப்படம் என்றால் அது ஜெய் பீம் திரைப்படம் தான். இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சூர்யா நடித்திருப்பார் மேலும் இத் திரைப்படமானது பழங்குடிமக்களின் அடிப்படை உரிமைக்காக போராடுவது இந்த திரைப்படத்தின் கதையாகும்.
அந்தவகையில் இந்த திரைப்படத்தில் பழங்குடி மக்கள் இளைஞர்களை போலீஸ் அதிகாரிகள் தங்களுடைய முடிக்க முடியாத வழக்குகளுக்கு அவர்களை கைது செய்து துன்புறுத்துவதும் திருட்டு பழி சுமத்துவதும் வழக்கமான நிலையில் இவர்களை காப்பாற்றுவதற்காக வழக்கறிஞராக இத்திரைப்படத்தில் வாதாடுபவர் தான் சூர்யா.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட இருப்பதாக அன்புமணி ராமதாஸ் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக பல்வேறு மக்களும் வேதனையையும் கொந்தளிப்பையும் காட்டி உள்ளார்கள்.
இந்நிலையில் நடிகர் சூர்யா அன்புமணி ராமதாசுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு அறிக்கை ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் நான் எந்த ஒரு நபரையோ அல்லது சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது.
அந்த வகையில் பலர் கலாச்சாரம் என்ற பெயரில் சுட்டிக்காட்டப்பட்ட பல்வேறு கட்சிகளும் நீக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமும் தேவையும் எனக்கு கொஞ்சம் கூட இல்லை என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
பொதுவாக சமுதாய ரீதியாக எந்த ஒரு திரைப்படம் வந்தாலும் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சி தலைவர்களும் அந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் இத்திரைப்படத்தின் விமர்சனங்கள் அனைத்தும் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு தொடர் புள்ளியாக அமைந்து வருகிறது.