சூர்யா படத்திற்கு ”ரெட் கார்ட்” இனி தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகாது.! விவரம் இதோ!!

surya
surya

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் பொன்மகள்வந்தாள். இத்திரைப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் வெளியிட முடியாமல் சிக்கித் தவித்து வருகிறார்கள் படக்குழுவினர். இது ஒரு பக்கம் இருந்தாலும் விருது விழா ஒன்றில் ஜோதிகா அவர்கள் தஞ்சை பெரிய கோயிலை எடுத்துக்காட்டாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இந்த சூழலில் படத்தை வெளியிட்டால் 4.5 கொடியும் நஷ்டம் ஆகிவிடும் என கருதி சூர்யா அவர்கள் கொரோனா வைரஸ் காரணம்காட்டி இப்படத்தினை அமேசான் ப்ரைம்க்கு 9 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்.இப்படத்தினை திரையரங்குகளுக்கு விற்காமல் நேரடியாக ஆன்லைன் விற்பனை செய்த சூர்யாவை கண்டித்து இனி சூர்யா நடித்த படங்கள் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த படங்களை திரையரங்கில் வெளியிட போவதில்லை என தமிழ்நாடு திரை உரிமையாளர் சங்கம் முடிவு எடுத்துள்ளனர். இதனால் சூர்யா மற்றும் சூர்யா ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

ஏற்கனவே தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஆன்லைன் டிஜிட்டல் பிளாட்பாரமான நெட்பிளிக்ஸ், அமேசான், பிரைம் போன்ற தளங்கள் வாயிலாக தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் இவர் செய்தது மிகப்பெரிய தவறு என திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.இது போன்ற ஆன்லைன் டிஜிட்டல் தளங்கள் தியேட்டருக்கு ஆப்பு வைக்கும் வகையில் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு வரை அனைவரும் சினிமா டு ஹோம் ஐடியாவை கடுமையாக தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.