தமிழ் சினிமாவில் சமிபத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் உருவாக்குவது வழக்கமாகிப் போய்விட்டது அந்த வகையில் சமீபத்தில் வெளியாகிய ஜெய் பீம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் பல்வேறு பிரச்சனையை சந்தித்து வந்துள்ளது.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் அவர்கள் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மேலும் இத்திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்தது.
இவ்வாறு உருவான திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் நவம்பர் இரண்டாம் தேதி வெளியான இந்த திரைப்படம் சுமார் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
என்னதான் இந்த திரைப்படம் அசுர வளர்ச்சி பெற்றாலும் இதில் பல்வேறு சர்ச்சைகள் இருந்ததன் காரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து வந்தனர் இருந்தும் முதல்வர் முக ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்து தான் வந்தார்கள்.
இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவ்வாறு பிரமாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது மட்டுமில்லாமல் இதில் டாக்டர் பட நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் முதலில் ஜனவரி மாதம் வெளியிடப்போவதாக படக்குழுவினர் முடிவு செய்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் தள்ளிவைக்கப்பட்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படமும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.