இந்த வருடம் கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் பல நடிகர்கள், நடிகைகள் மாலத்தீவில் தனது பொழுதை கழித்து வருகிறார்கள்.
அந்த வகையில் வலம் வருபவர் தான் ரகுல் ப்ரீத் சிங் இவர் கொரோனா கால கட்டத்தில் தனது குடும்பங்களுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக மால தீவுக்கு சென்று அங்கு தனது குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்ச்சாகபடுத்தி வந்தார்.
மேலும் இவர் பட வாய்ப்புகளை அதிகமாக கைப்பற்றுவதற்காக சமீப காலமாகவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவரைப் பற்றி ஒரு பரபரப்பான தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகி விட்டதாம் அந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நான் உடல்நலத்துடன் தான் இருக்கிறேன் ஒரு சிறிய ஓய்விற்காக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டு வருகிறேன் என்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று நன்றி தெரிவித்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
இவர் பகிர்ந்த பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அந்த தகவலை பார்த்த ஒரு சில ரசிகர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டும் ரகுல் ப்ரீத் சிங் வர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை பண்ணி வருகிறார்கள்.