திரைக்கு வராமலேயே நேரடியாக தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் சூர்யாவின் திரைப்படம்.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

surya

சூர்யா தற்போது நவரசா என்ற வெப் சீரியஸ் தொடரில் நடித்து வருகிறார் மேலும் இவர் பல படங்களில் கமிட்டாகி விட்டார் என்பது பலருக்கும் தெரியும் இதனையடுத்து சூர்யாவின் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு OTT தளத்தில் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்ட படம்தான் சூரரைப்போற்று.

இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் சூர்யாவை பாராட்டியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் தான் OTT தளத்தில் வெளியான திரைப்படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஒரு ஒரு தொலைக்காட்சியில் வெளியாக உள்ளதாம் அதாவது சிங்கப்பூரை சேர்ந்த வசந்தம் என்ற தொலைக்காட்சியில் புத்தாண்டை முன்னிட்டு சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அதற்க்கான  ப்ரோமோ தற்போது இணையதளத்தில் வெளியாகி சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.