தமிழ் சினிமாவில் இசை அமைப்பு மட்டுமின்றி நடிப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவர் தான் ஜிவி பிரகாஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் மிக அதிக நாட்களாக நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் ஜெயில். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தினை ஸ்ரீதரன் அவர்கள்தான் தயாரித்துள்ளார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட இரட்டை வசனங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சென்னையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்தில் பல்வேறு சிக்கல்கள் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டே இருக்கிறது.
இவ்வாறு பல சிக்கல்களை கடந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது ஏனெனில் இந்த திரைப்படத்தின் வெளியீடு உரிமை எங்களிடம் இருக்கிறது என சூர்யாவின் உறவினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள்.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதி மன்றத்திற்கு சென்ற பிறகு பல்வேறு வாதத்திற்கு பிறகாக இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டார்கள்.
இவ்வாறு ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான இந்த ஜெயில் திரைப்படமானது வருகின்ற டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி திட்டமிட்டபடி திரையரங்கில் வெளியாகும் என்று வெளி வந்த தகவலின் படி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.