கமலஹாசன் நடித்த “விக்ரம்” படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்குமாம் – திரையரங்கில் ரசிகர்கள் மெய்சிலிர்த்து பார்ப்பார்கள்.!

kamal-and-surya
kamal-and-surya

உலகநாயகன் கமலஹாசன் எப்பொழுதும் சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு நடிப்பது தான் வழக்கம் ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை அவருக்கு பிடித்து போகவே விக்ரம் படத்தில் நடித்தார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி முடிந்த நிலையில் படம்.

வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது படம் வெளிவருவதற்கு முன்பாகவே படத்தின் டிரைலர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பத்தல பத்தல பாடல் என அனைத்தும் ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளதால் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு உலக அளவில் அதிகரித்துள்ளது.

அதேசமயம் விக்ரம் திரைப் படத்தில் கமலுடன் இணைந்து பல ஜாம்பவான்கள் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் போன்றவர்கள் நடித்துள்ள தான் படத்தின் எதிர்ப்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது. ஒரு சில நடிகர் நடிகைகள் பெயர்கள் குறிப்பிடப்படாமல் படக்குழு ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கும் எனவும் தெரியவருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் சூர்யா படத்தின் கடைசியில் பத்து அல்லது பதினைந்து நிமிடம் வந்து போவார் என அறிவித்த நிலையில் தற்போது சூர்யா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

என்பது குறித்து பிரபலம் ஒருவர் கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது. சூர்யாவின் கதாபாத்திரம் மிக வலிமையான கதாபாத்திரம் சூர்யா வரும் காட்சியை திரையரங்கில் ரசிகர்கள் அனைவரும் ரசித்து பார்ப்பார்கள் அந்த அளவிற்கு இருக்கும் என கூறியுள்ளார்.