இந்திய அணி 20 உலக கோப்பை போட்டி தோற்றதற்கு பிறகு நியூசிலாந்து அணி உடன் தற்பொழுது விளையாண்டு வருகிறது நியூசிலாந்து அணி உடன் மூன்று ஒரு நாள் போட்டி மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது. அதில் முதல் போட்டி மழையின் காரணமாக நின்றது இரண்டாவது போட்டி மவுண்ட் மாங்கனி நகரில் நடந்தது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இதனை அடுத்து களம் கண்ட இந்திய அணி ஆரம்பத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பாக சூர்யா குமார் யாதவ் களத்திற்கு வந்த பிறகு சரசரவென ரன் ஏறியது மறுபக்கம் சூர்யா குமார் யாதவ் ரன் வேட்டை நடத்தினார்.
ஒரு வழியாக 20 ஓவர்கள் ஆட்டமிழக்காமல் நின்று சூர்யாகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 191 ரன்கள் எடுத்தது இதனை அடுத்து களம் கண்ட நியூசிலாந்த் அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்து 126 ரன்கள் ஆல் அவுட் ஆனது தோல்விக்கு பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கெயின் வில்லியம்சன் கூறியது..
நான் பார்த்த சிறப்பான இன்னிங்களில் இதுவும் ஒன்று அடித்து சொல்வேன் ஏனெனில் அந்த அளவிற்கு நம்ப முடியாத பல ஷாட்டுகளை சூர்யாகுமார் யாதவ் விளையாடினார். இப்படி ஒரு வீரர் ஆடி நான் இதுவரை பார்த்ததே கிடையாது அந்த அளவிற்கு அவருடைய ஆட்டம் சிறப்பாக இருந்தது. நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படவில்லை என்று நினைக்கிறேன்.
ஏனெனில் துவக்கத்தில் எங்களுக்கு விக்கெட்டுகள் கிடைத்தாலும் அதன் பின்னர் மிடில் ஆர்டர்களில் இந்திய அணியை தடுத்து நிறுத்தவே முடியவில்லை சூரியகுமார் யாதவ, இறுதிவரை விளையாடி போட்டியில் மிகப்பெரிய மாற்றத்தை தந்துவிட்டார். அதன் பின்னர் நாங்கள் பேட்டிங்களும் சிறப்பாக செயல்படவில்லை என்பதை நானே ஒப்புக்கொள்கிறேன் என கூறினார்.