தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் படங்கள் சுமாராக இருந்தாலே மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் உதாரணம் பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த பொழுதிலும் வசூல் ரீதியாக பீஸ்ட் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த திரைப்படம் வாரிசு இந்த படம் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் எடுக்கப்பட்டது. படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, பிரபு, யோகி பாபு, எஸ் ஜே சூர்யா, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர்.
படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் ஆரம்பத்திலேயே பாசிட்டிவான விமர்சனத்தை பெற்றது இதனால் ரசிகளையும் தாண்டி குடும்ப அடியேன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அடுத்த அடுத்த நாட்களிலும் கூட்டம் அதிகமாகின..
இதன் காரணமாக அதிக நாட்கள் ஒடியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் 250 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி கண்டது. தற்பொழுது வாரிசு திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி வெற்றி கண்டு வருகிறது இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யாகுமார் யாதவ்..
தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தை ஆர்வத்துடன் பார்த்து கைதட்டி சிரித்துள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது வீடியோவை பார்த்த ரசிகர்களும் நீங்க தளபதி ரசிகரா என கேட்டேன் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
https://twitter.com/Ayyappan_1504/status/1662423244538884098?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1662423244538884098%7Ctwgr%5E0bd4b2ac403fd8a991eea25be318385b67c52610%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fsuryakumar-yadav-watching-varisu-movie-1685192905